தமிழ்நாடு

விஜய்யின் புதிய அணுகுமுறை! திருமாவளவன் விமர்சனம்!

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்தது புதிய அணுகுமுறை - விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்தது புதிய அணுகுமுறையாக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசுகையில், ``பாதிக்கப்பட்டவர்களை, அவர்களின் இடங்களுக்குச் சென்று சந்தித்து, ஆறுதல் சொல்வதுதான் இவ்வளவு காலம், நாம் பார்த்திருக்கிறோம். அதைத்தான் அரசியல் தலைவர் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.

நடிகர் விஜய், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் சென்னை வரவழைத்து பார்ப்பது, ஒரு புதிய அணுகுமுறையாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

முன்னதாக, கரூருக்கு விஜய் சென்றால், அவரின் உயிருக்கு பாதுகாப்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: விஜய்யின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் - நயினார் நாகேந்திரன்

TVK's Leader Vijay's new approach says VCK Leader Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்நாடக காங்கிரஸ் - அஸ்ஸாம் பாஜக வார்த்தைப் போர்!

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை!

ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி

தில்லியில் இன்று செயற்கை மழைக்குத் திட்டம்! வானிலை மனம் வைத்தால்..

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT