IANS
தமிழ்நாடு

சென்னை, திருவள்ளூரில் மிதமான மழை தொடரும்!

வானிலை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் இன்று மாலை அல்லது இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்று (அக்.28) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களிலும்

செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போதும் மிதமான மழை வாய்ப்புள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Montha cyclone: Tamilnadu rain update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமைக்காவில் கடும் சேதம்! கியூபாவை நோக்கி நகரும் மெலிஸா புயல்!

பிகாரில் இன்று பிரசாரத்தைத் தொடங்குகிறார் ராகுல்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து திடல்: செளதியின் கனவுத் திட்டம்!

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

‘தோ்தல் நேர வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு’

SCROLL FOR NEXT