முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களில் மழை தொடரும்!

அடுத்த 3 மணிநேரம் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்...

Updated On : 28 அக்டோபர், 2025 at 4:54 AM
மழை - EPS
பகிர்:

தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா தீவிரப் புயல் ஆந்திரக் கடற்கரையை நெருங்கி வருகின்றது. இதனால், ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Rain to continue in Chennai and 10 districts for next 3 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.