தவெக தலைவர் விஜய் 
தமிழ்நாடு

நவ. 5-ல் தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம்!

தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம் தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது.

சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் 'துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்'. அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.

தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை. அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது. இதை, நாம் சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மெளனம் சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர். சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர்.

கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான். நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும்.

இத்தகைய சூழலில், கட்சியின் அடுத்த கட்டத் தொடர்நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்

ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கட்சியின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி, வருகிற நவ. 5 ஆம் தேதி புதன்கிழமை அன்று. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம். மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ்பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The special general committee meeting of the Tvk will be held on Nov. 5, party leader Vijay has announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபா் சுட்டுக் கொலை

பிஎம் ஸ்ரீ திட்டம் நிறுத்திவைப்பு! - கேரள முதல்வா்

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய உளவாளி பாகிஸ்தானுக்கு சென்று வந்தது கண்டுபிடிப்பு

கிழக்கு லடாக் எல்லை விவகாரம்: அமைதி, ஸ்திரத்தன்மையை பராமரிக்க இந்தியா-சீனா முடிவு

விளையாட்டு துளிகள்...

SCROLL FOR NEXT