நான் முதல்வன் திட்டத்தில் பயின்று முதல் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவி பிரேமாவுக்கு, கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படும் நிலையில், அதனை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நெல்லை கலைஞர் கனவு இல்லத் திட்ட பயனாளியான மாணவி பிரேமா வீட்டுக்கு இன்று காலை நேரடியாகச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவி பிரேமா, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் பங்கேற்றபோது, முதல்வர் ஸ்டாலினிடம், தன்னுடைய தந்தைக்காக ஒழுகாத வீடு வேண்டும் என்று கோரியிருந்தார். இதனைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், அந்த மேடையிலேயே மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், மாணவி பிரேமாவுக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்து தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை பெற்றிருக்கும் தென்காசியைச் சேர்ந்த பிரேமா, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்த என் தந்தை, மழையில் ஒழுகும் வீட்டில் வாழ்ந்து வருவதாகக் கூறி கண்ணீர் விட்டார். இதைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், அவருக்கு புதிய வீடு கட்டிக் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.
ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை இனி பிரேமாவுக்கு வேண்டாம். புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கியிருக்கிறேன் என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது தென்காசியில் கட்டப்பட்டு வரும் வீட்டை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. மோந்தா புயல் வலுவிழந்தது! ஆந்திரத்தில் ஒருவர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.