சென்னையில் இருந்து திருச்சி சென்ற பல்லவன் விரைவு ரயிலில் கரப்பான் பூச்சிகளால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு தினந்தோறும் மாலை 3.40 மணிக்கு பல்லவன் விரைவு ரயில்(12605) செல்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகளில் இந்த ரயிலில் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து திருச்சி சென்ற பல்லவன் விரைவு ரயிலில் உள்ள டி5 கோச்சின் நம்பர் 70- 80 இருக்கைகளின் கீழ் 100-க்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரிந்ததால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
சமீபகாலமாகவே, ரயில்களில் வழங்கப்படும் உணவுகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் மூட்டைப் பூச்சிகள் கிடப்பது போன்ற பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், பயணிகளின் இருக்கையின் கீழே கரப்பான் பூச்சிகள் சுற்றித்திரிந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.