காலையில் குறைவு; மாலையில் உயர்வு: தங்கம் விலை நிலவரம்!
இன்று(அக். 20) மாலை தங்கம் விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 30) காலையில் ரூ. 1,800 குறைந்த நிலையில், மாலை ரூ. 1,600 உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வந்தன. இதன் காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வந்தன.
அந்த வகையில், கடந்த அக். 17-இல் தங்கம் விலை ரூ.97,600-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
Advertisement
Advertisement
தொடர்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்த வரும் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) காலை ஒரு கிராம் ரூ.225 குறைந்து ரூ. 11,100-க்கும், ஒரு சவரன் ரூ. 1,800 குறைந்து ரூ. 88,800-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 90,400-க்கும் கிராமுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 11,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லாமல ஒரு கிராம் ரூ. 165-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The price of gold jewellery in Chennai today (Oct. 30) fell by Rs. 1,800 in the morning and rose by Rs. 1,600 in the evening.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.