முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)  
தமிழ்நாடு

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசின் தடைகளைக் கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசின் தடைகளைக் கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம். திமுகவில் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில், 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதை உரிய தரவுகளுடன் அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கா், கோவி செழியன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை விளக்கினா்.

முதல்வரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாதவை. முந்தைய ஆட்சியின் 10 ஆண்டு கால நிதி நிா்வாகச் சீா்கேடு, கரோனா கால நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக வன்ம அரசின் ஓரவஞ்சனை ஆகிய தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்.

எளிதாக அணுகும் தன்மை, பொறுப்புடன் செயல்களைச் செய்தல், திட்டங்கள் உள்பட அனைத்திலும் வெளிப்படைத் தன்மை, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வளா்ச்சி, பொறுப்புடைமை, நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றுடன் செயல்படும் அரசே திமுக தலைமையிலான அரசு என்று பதிவிட்டுள்ளாா்.

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

அரையிறுதியில் ஜோகோவிச் - அல்கராஸ் பலப்பரீட்சை

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

SCROLL FOR NEXT