பிரிட்டன் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டுடன் முதல்வர் ஸ்டாலின்.  
தமிழ்நாடு

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அரசு முறை பயணமாகப் பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், மொத்தமாக 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரிட்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திற்கான நாடாளுமன்ற துணைச் செயலர் கேத்தரின் வெஸ்ட் எம்.பி.யை சந்தித்தார். இருவரும் தமிழ்நாடு - பிரிட்டன் இடையேயான கூட்டாண்மை உறவுகள் குறித்து விவாதித்தனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், லண்டனில், தமிழ்நாடு-இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்த இங்கிலாந்து அமைச்சர் திருமிகு கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்தேன்.

பசுமைப் பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் கடல்வழி போக்குவரத்து ஆகியவைப் பற்றி நாங்கள் விவாதித்தோம்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் தமிழ்நாட்டின் திறன்களை எடுத்துரைத்தேன்.

வருங்காலங்களில் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க இங்கிலாந்து ஒத்துழைக்க ஆதரவை கோரினேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Chief Minister Stalin meets British Minister!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜூனியா் ஹாக்கி உலக கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

கோவில்பட்டியில் மரக்கன்று நடும் விழா

திருச்சி-சென்னை புறவழிச் சாலையில் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி மறியல்: போக்குவரத்து கடும் பாதிப்பு

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

தக்கலையில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT