இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: செப். 8 முதல் கனமழை!
எங்கெல்லாம் வெப்பம் அதிகரிக்கும், மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன..
தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (03-09-2025) காலை வடக்கு ஒரிசா கடலோரப் பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 17.30 மணிளவில் ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி, மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (04-09-2025) காலை 05.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, வடக்கு சட்டீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
Advertisement
Advertisement
செப்.4 முதல் 7 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப். 8ல் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப். 9ல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை அதிகமாக இருக்கக்கூடும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.