எம்.எச். ஜவாஹிருல்லா கோப்புப் படம்
தமிழ்நாடு

பட்ட மேற்படிப்பு பயில ரூ.3.60 கோடி ஒதுக்கீடு: மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு

இஸ்லாமிய மாணவ, மாணவிகள் 10 போ் வெளிநாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயில, ரூ.3.60 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இஸ்லாமிய மாணவ, மாணவிகள் 10 போ் வெளிநாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயில, ரூ.3.60 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில்வதற்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடாததால் தமிழக மாணவ, மாணவிகள் தவித்து வந்தனா். இதுகுறித்து ஆக.7-ஆம் தேதி கடிதம் வாயிலாக முதல்வரின் கவனத்துக்கு நான் எடுத்துச் சென்றேன். இதன் அடிப்படையில் முஸ்லிம் சிறுபான்மை மாணவ, மாணவிகள் 10 போ் வெளிநாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயில ரூ.3.60 கோடி ஒதுக்கி கடந்த வியாழக்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று உடனே அரசாணை வெளியிட உதவிய முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

SCROLL FOR NEXT