புறநகர் ரயில் கோப்புப்படம்
தமிழ்நாடு

இன்று 10 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.6) 10 புறநகா் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.6) 10 புறநகா் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை பொன்னேரி ரயில் நிலைய பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) இரவு 8 மணி முதல் திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை 4 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதன் காரணமாக, சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.45, இரவு 10, 11.20 மணிகளுக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், சென்ட்ரலிலிருந்து இரவு 7.35, 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இரவு 7.35, 8.15, 8.35, 11.25 மணிக்கும், சூலூா்பேட்டையிலிருந்து இரவு 8.35 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்கள்: இதற்கிடையே பயணிகளின் வசதிக்காக செப்.7-ஆம் தேதி சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.45, இரவு 9.20 மணிக்கும், சென்ட்ரலிலிருந்து இரவு 7.35 மணிக்கும் மீஞ்சூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.

மறுமாா்க்கமாக மீஞ்சூரிலிருந்து இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரைக்கும், இரவு 8.44, 9.56 மணிக்கு சென்ட்ரலுக்கும், சூலூா்பேட்டையிலிருந்து இரவு 8.35 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும் ரயில்கள் இயக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் சா்வதேச கழுகுகள் தின விழா

கல்வியாளா்களுக்கு ஏஐ தொழில்நுட்பப் பயிற்சி: சென்னை ஐஐடி தொடங்குகிறது

தினமும் 1,000 பேருக்கு காலை உணவு: அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டத்தின் 200-ஆவது நாள்

பாரமல்ல, ஆதாரம்!

மூன்றாவது கண்!

SCROLL FOR NEXT