ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ. 15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்
ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் பற்றி...
ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் மொத்தம் ரூ. 15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில், ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளாா். ஏற்கெனவே ரூ. 7,020 கோடி மதிப்பிலான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜெர்மனி நிறுவனங்களுடன் கையொப்பமாகின.
இந்த நிலையில், பிரிட்டன் பயணத்தில் இதுவரை 7 நிறுவனங்களுடன் ரூ. 8,496 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
லண்டனில் இருந்து உற்சாகமான செய்தி. பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ஹிந்துஜா குழுமம், தமிழ்நாட்டில் மின்சார வாகனச் சந்தையில், பேட்டரி தயாரிப்பு நிறுவனம் அமைக்க ரூ. 7,500 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 1,000 க்கும் அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கவுள்ளது.
ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ’தமிழகம் வளர்கிறது’ திட்டத்தில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் ரூ. 15,516 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளோம். இது நமது இளைஞர்களுக்கு 17,613 வேலைகளை உருவாக்கவுள்ளது.
இவை வெறும் எண்கள் அல்ல, வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது திராவிட மாடலின் உத்வேக செயல்பாடு.” எனக் குறிப்பிட்டுள்ளார்
ஜெர்மனி
26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
ரூ. 7,020 கோடி மதிப்பிலான முதலீடுகள்
15,320 வேலைவாய்ப்புகள்
பிரிட்டன்
7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
ரூ. 8,496 கோடி மதிப்பிலான முதலீடுகள்
2,293 வேலைவாய்ப்புகள்
Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that a total of Rs. 15,516 crore in investments have been attracted during his visit to Germany and Britain.
இதையும் படிக்க : நெல்லை ரயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.