உச்ச நீதிமன்றம் 
தமிழ்நாடு

தமிழக டிஜிபி விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக டிஜிபி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக புதிய காவல்துறை தலைவர் நியமன நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறை தலைவராக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், வெங்கடராமனுக்கு முன்பாக 8 மூத்த அதிகாரிகள் இருக்கும் நிலையில், 9 வது இடத்தில் இருக்கும் அவரை நியமித்ததற்கு விமர்சாங்கள் எழுந்தன.

மேலும், டிஜிபி ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே யுபிஎஸ்சி-க்கு தகுதியான புதிய டிஜிபி பெயர்களை மாநில அரசு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு மீறியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன.

இந்த நிலையில், தமிழக டிஜிபி நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், புதிய டிஜிபியை நியமிக்கும் பணிகள் நடைமுறையில் இருப்பதாக தமிழக அரசு பதிலளித்திருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக புதிய டிஜிபியின் பெயரை விரைவாக பரிசீலனை செய்து அனுப்ப யுபிஎஸ்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், யுபிஎஸ்சி பரிந்துரைக்கும் பெயர்களின் அடிப்படையில் வழக்கமான நடைமுறையை பின்பற்றி புதிய டிஜிபியை நியமிக்க தமிழக அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The Supreme Court on Monday ordered that the appointment process for the new Tamil Nadu police chief be expedited.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாள போராட்டம் எதிரொலி: விவசாயத் துறை அமைச்சரும் ராஜிநாமா!

நேபாளத்தில் பதற்றம்! அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு!

இட்லி கடை டிரைலர் தேதி!

சென்னைக்குள் புகுந்த மிகப் பயங்கர நவோனியா கும்பல்! எச்சரிக்கை!!

தொகுதிவாரியாக சுற்றுப்பயணம்!அண்ணா இல்லத்தில் இருந்து தொடங்கினார் உதயநிதி!

SCROLL FOR NEXT