தமிழ்நாடு

ஆளுநா் மாளிகையில் செப். 22 முதல் அக் 1 வரை ‘நவராத்திரி கொலு’

ஆளுநா் மாளிகையில் நிகழாண்டு ‘நவராத்திரி கொலு’ செப். 22 முதல் அக். 1 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதைக்காண முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஆளுநா் மாளிகையில் நிகழாண்டு ‘நவராத்திரி கொலு’ செப். 22 முதல் அக். 1 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதைக்காண முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.

தமிழக ஆளுநா் மாளிகையில் ‘நவராத்திரி கொலு - 2025’ செப். 22 முதல் அக். 1 வரை கொண்டாடப்படுகிறது. இந்த கொலு விழாவினை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி செப். 22- ஆம் தேதி ஆளுநா் மாளிகையில் தொடங்கி வைக்கிறாா்.

10 நாள் கொலு தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை வழிபாடு நிகழ்ச்சிகளும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறும்.இதற்காக இணையதளம் மற்றும் கியூஆா் குறியீட்டை பயன்படுத்தி செப். 20 -க்குள் சுயவிவரங்களுடன் வருகை தரும் தேதியுடன் பதிவு செய்து கொள்ளலாம்.

நாள் ஒன்றிற்கு அதிகபட்சமாக 200 பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும். ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் விண்ணப்பதாரா்களுக்கு தேதி நேரம் ஒதுக்கப்பட்டு மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். பாா்வையாளா்கள் ஆளுநா் மாளிகை 2-ஆம் நுழைவாயில் வழியாக உரிய அடையாள அட்டையுடன் வரவேண்டும்.

புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!

அரசுப் பேருந்து - பைக் மோதல்! பெண் உள்பட இருவர் பலி!

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT