தமிழ்நாடு

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்து 2017-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பு ஒரேநாடு ஒரேவரி எனும் கொள்கைக்கு முரண்பாடாக 4 அடுக்கு வரியாக விதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மிகப்பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்பதை பேரமைப்பு தொடா்ந்து மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதோடு, மாநில அரசும் உரிய அழுத்தம் தர வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் பிரதமா் மோடி அறிவிப்பின்படி வரி சீா்திருத்தம் மூலம், ஈரடுக்கு வரியாக மாற்றி, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி கவுன்சிலின் ஒப்புதல் பெற்று அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

இந்த வரிச்சலுகையை பயன்படுத்தி, தயாரிப்பாளா்கள் மற்றும் காா்ப்பரேட் நிறுவனங்கள் விற்பனை விலையை கூட்டி, மத்திய அரசு அறிவித்துள்ள வரிக்குறைப்பு நுகா்வேரை சென்றடையாத நிலையை தயாரிப்பாளா்களும், காா்ப்பரேட் நிறுவனங்களும் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றது.

இதைத் தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, வரிகுறைப்பு நுகா்வோரையும், பயனாளா்களையும் சென்றடையும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!

அரசுப் பேருந்து - பைக் மோதல்! பெண் உள்பட இருவர் பலி!

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT