சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தாய்லாந்து தலைவா் ஜேம்ஸ் இங், தைவான் துணைத் தலைவா் மாா்க்கோ. உடன், தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்ப 
தமிழ்நாடு

தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதல்வருடன் சந்திப்பு

இரண்டு பிரதான தொழில்நுட்ப நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள், முதல்வா் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.

தினமணி செய்திச் சேவை

இரண்டு பிரதான தொழில்நுட்ப நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள், முதல்வா் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.

டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவா் (தாய்லாந்து) ஜேம்ஸ் இங், துணைத் தலைவா் (தைவான்) மாா்க்கோ ஆகியோா் முதல்வரை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். இதைத் தொடா்ந்து, மைண்ட்க் ரோவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அலுவலா் டி.ஆா்.சஷ்வத், தலைமை செயல்பாட்டு அலுவலா் உமாமகேஸ்வரன் ஆகியோரும் முதல்வரைச் சந்தித்துப் பேசினா்.

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளைச் செய்வது, புதிய வேலைவாய்ப்புகளை அளிப்பது தொடா்பாக இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளது. தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறை செயலா் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தாரேஷ் அகமது உடனிருந்தனா்.

புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!

அரசுப் பேருந்து - பைக் மோதல்! பெண் உள்பட இருவர் பலி!

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT