தமிழ்நாடு

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் வரும் செப்.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் வரும் செப்.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முன்னதாக பிகாா் மாநிலம் ஜோக்பானியில் இருந்து வருகிற செப்.15-ஆம் தேதி இந்த ரயிலை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறாா். மறுமாா்க்கத்தில் ஈரோட்டிலிருந்து செப்.18-ஆம் தேதி காலை இந்த ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதில் 8 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 11 தூங்கும் வசதியுடைய பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் உள்பட 22 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT