எம்ஜிஆர் படத்தைக் காட்டி அதிமுக தொண்டர்களை யாரும் அவ்வளவு பிரிக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் அவர் அளித்த பேட்டியில், நான் அமைச்சராக இருக்கும்போது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தேன். பத்திரப்பதிவுத் துறை அமைச்சரின் கிழக்கு தொகுதிக்கும் பாதாள சாக்கடை திட்டம் நாங்கள் கொண்டு வந்தோம்.
மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. ஆனாலும் எங்களுடைய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி அதிமுக. விஜய் எம்ஜிஆர் படத்தைக் காட்டி படத்தில் படம் காட்டுவது போல் வேண்டுமென்றால் காட்டி கொள்ளலாம்.
அதிமுக தொண்டர்களை யாரும் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது. விஜய்க்கு எங்கள் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லுவார். புயல் மையம் கொண்டுள்ளது எனச் சொல்வார்களே அதே போல எடப்பாடி பழனிசாமி சென்ற இடங்களில் மக்கள் மையம் கொண்டுள்ளனர்.
ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள் அது முடியாது. யாராவது கலைஞர் ஆட்சி அமைப்போம் என சொல்கிறார்களா. அதிமுக பற்றிதான் பேசுகிறார்கள் தவிர திமுக பற்றி யாராவது பேசுகிறார்களா.
டிப்பன்பாக்ஸ் கொடுத்தால் மக்கள் ஏமாந்து விடுவார்களா. உதயநிதிக்கு எழுதிக் கொடுத்தவர்கள் தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.