திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் சில நிறைவேறாததற்கு மத்திய அரசுதான் காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் இன்று (செப். 15) மாநாடு நடைபெற்றது.
முன்னாள் எம்.பி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய வைகோ, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு மதிமுக உழைக்கும் எனப் பேசினார்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து அவர் பேசியதாவது,
எந்தத் தடையையும் பொருட்படுத்தாது மதிமுக பயணித்துக்கொண்டே இருக்கும். செந்தமிழ் நாட்டைக் காக்க போராடிய இயக்கம்.
உண்ணாவிரதம், நடைப்பயணம் என போராடிப் போராடி ஸ்டெர்லைட் ஆலையை விரட்டியடித்த இயக்கம் மதிமுக.
டாக்டர் அம்பேத்கர் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்துவைக்க காரணமாக இருந்தது மதிமுக என்பதை மறந்துவிட முடியாது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டது. கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாமல்போனதற்கு மத்திய அரசுதான் காரணமாக இடைநிற்கிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற மதிமுக உழைக்கும் எனப் பேசினார்.
இதையும் படிக்க | மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.