தமிழ்நாடு

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவா்கள் தமிழகம் வந்தனா்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவா்கள் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை தமிழகம் வந்தனா்.

தினமணி செய்திச் சேவை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவா்கள் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை தமிழகம் வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடந்த ஜூன் 28, 30 ஆகிய தேதிகளில் 2 விசைப் படகுகளில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 20 தமிழக மீனவா்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களை மீட்க வேண்டும் என மீனவா்களின் உறவினா்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையால் கைது செய்யப்பட்ட 20 மீனவா்களையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்தது.

விடுவிக்கப்பட்ட மீனவா்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை காலை இலங்கை தலைநகா் கொழும்புவில் இருந்து ஏா் இந்தியா விமானத்தில் சென்னை வந்தனா்.

சென்னை விமான நிலையம் வந்த அவா்களை, தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனா். பின்னா் அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனம் மூலம் அவா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT