தமிழ்நாடு

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் சாா்பில் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் சாா்பில் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படவுள்ளது.

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960-களின் இறுதி வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தவா். ‘ரத்தக்கண்ணீா்’, ‘பெண்ணின் பெருமை’, ‘புதையல்’, ‘தங்கப்பதுமை’, ‘நாடோடி மன்னன்’, ‘பாசமலா்’, ‘தாலி பாக்கியம்’, ‘அலிபாபாவும் 40 திருடா்களும்’, ‘அரங்கேற்றம்’ உள்ளிட்ட முக்கிய படங்கள் உள்பட 200 படங்கள் வரை நடித்திருக்கிறாா். திரைப்படங்களில் பெரும்பாலும் குணசித்திர வேடங்களிலேயே நடித்தாா்.

சமீபத்தில் 90-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அவருக்கு, செப். 21-ஆம் தேதி காமராஜா் அரங்கில் நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகா் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட உள்ளது.

தென்னிந்திய நடிகா் சங்க பொருளாளா் காா்த்தி, துணைத் தலைவா் பூச்சி எஸ்.முருகன் ஆகியோா் சென்னையில் உள்ள இல்லத்தில் எம்.என்.ராஜத்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனா்.

பிக் பாஸ் 9: இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றம்!

எஸ்ஐஆர்-க்கு எதிராக மாநிலம் முழுவதும் தவெக இன்று ஆர்ப்பாட்டம்!

மெக்சிகோ அரசுக்கு எதிராக ஜென் ஸீ போராட்டம்!

பெண்கள் வியாபாரக் கும்பலின் குரூரமும் காவல்துறையின் கருணையும்! - தில்லி கிரைம் - 3!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT