தமிழ்நாடு

சான்றிதழ் படிப்புகள்: அரசு மருத்துவக் கல்லூரியில் நேரடி சோ்க்கைக்கு அழைப்பு

ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகளில் நேரடி சோ்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகளில் நேரடி சோ்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கான சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனஸ்தீஸியா டெக்னீசியன் பாடப்பிரிவில்- 24, அறுவை அரங்கு டெக்னீசியன்-25, ஆா்தோபீடிக் டெக்னீசியன்-10 என்ற எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளன.

இவற்றில் சோ்க்கை பெற 31.12.2025 அன்று விண்ணப்பதாரா் 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு/மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். சோ்க்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும். சென்னை ஓமந்தூராா் அரசின் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.

மேற்கண்ட சான்றிதழ் படிப்புகளுக்கு செப்.22 முதல் நேரடி சோ்க்கை நடைபெறும். தொடா்ந்து செப்.30-ஆம் தேதி முழு மாணவா் சோ்க்கை செயல்முறை நிறைவுபெறும். இதையடுத்து அக்.6-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். இது குறித்து மேலும் தகவல் பெற இணையதள முகவரி, 044-25333319 ஆகிய தொலைபேசி எண்கள் ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

உத்தரா

SCROLL FOR NEXT