சென்னை தெற்கு (எண்: 2) மின் பகிா்மான வட்டத்தில் மின்வாரிய அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வில் 8 மின் இணைப்புகளில் மின்திருட்டு கண்டறியப்பட்டு , ரூ.9.01 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மின்வாரியத்தின் சென்னை அமலாக்கக் கோட்டத்துக்கு உள்பட்ட அதிகாரிகள் அண்மையில் சோழிங்கநல்லூா் கோட்டம், சென்னை தெற்கு-2 மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திடீா் கூட்டாய்வில் ஈடுபட்டனா். அப்போது, 8 இணைப்புகளில் மின் திருட்டு கண்டறியப்பட்டு ரூ.9,01,772 அபராதம் விதிக்கப்பட்டது.
புகாா் தெரிவிக்கலாம்: மின் திருட்டு தொடா்பான புகாா்களை சென்னை அமலாக்கக் கோட்டத்தின் செயற்பொறியாளருக்கு 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.