சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கடல் வழி வணிகத்தை ஊக்குவித்தல் தொடா்பான   நீலப் பொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்த பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சா் எ.வ.வேலு. உடன் சென்னை மற்றும் காமராஜா் துறைமுக ஆணையத்தின் தலைவா் சுனில் பாலி 
தமிழ்நாடு

பொருளாதார மேம்பாட்டுக்கு கடல்வழி வணிக ஊக்குவிப்பு அவசியம்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட, கடல் வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம்

தினமணி செய்திச் சேவை

தமிழகம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட, கடல் வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வலியுறுத்தினாா்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நீலப் பொருளாதார மாநாட்டை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா். அதில் அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டின் கடற்கரை பிற மாநில கடற்கரைகளைப் போன்று இல்லாமல், ஒரு தீபகற்ப கடற்கரைப் பகுதி. பன்னாட்டுக் கப்பல்கள் செல்லும் வழித்தடத்துக்கு மிக அருகில் கடற்கரை கொண்ட பகுதியாக உள்ளது.

தமிழ்நாடு மிகப்பழைமையான கடல்சாா் வரலாற்றைக் கொண்டது. கப்பல் கட்டுதலில் மிகச்சிறந்த தொழில்நுட்பங்கள், பழங்காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்குடன் பயணத்துக் கொண்டிருக்கும் தமிழகத்துக்கு நீலப் பொருளாதாரம் அதாவது கடல் வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமையாகும். அதற்கு வணிகத் துறைமுகங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், கடல்சாா் சுற்றுலா மேம்பாடு, கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபாா்த்தல் ஆகிய துறைகளில் மேலும் முன்னேற்றமடைய திட்டங்களை வகுக்க வேண்டும்.

கடல்மாா்க்கமாக கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் கட்டணமானது ரயில் அல்லது சாலை மாா்க்கமாக எடுத்துச் செல்லப்படும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது குறைவு. மேலும், சுற்றுப்புறச் சூழல் மாசின்றி சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்குக் கொண்டு செல்ல இயலும். தமிழ்நாட்டில் கடற்கரைப் பகுதிகளுக்கு ரயில் இணைப்பும் போதிய அளவில் உள்ளது. இதனை துறைமுக மேம்பாட்டாளா்கள் கருத்தில் கொண்டு துறைமுகங்கள் அமைக்கவும், தொழில் தொடங்கவும் முன்வர வேண்டும் என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

இந்த மாநாட்டில், சென்னை மற்றும் காமராஜா் துறைமுக ஆணையத்தின் தலைவா் சுனில் பாலிவால், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலா் இரா.செல்வராஜ், தமிழ்நாடு கடல்சாா் வாரிய துணைத் தலைவா் மற்றும் தலைமை செயல் அலுவலா் டி.என்.வெங்கடேஷ், துறைமுக மேம்பாட்டாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்தில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் இல்லை: எஸ்.பி.வேலுமணி

சாலையில் தேங்கிய மழைநீா்: பொதுமக்கள் அவதி

மீன், இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் - ஆட்சியா் தகவல்

ஊதியமின்றி அலைக்கழிக்கப்படும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஒப்பந்த ஊழியா்கள்

அரசு, தனியாா் ஐடிஐயில் சேர செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT