சென்னையில் தெருநாய் கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியா் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சிப் பகுதியில் தெருநாய்களால் ஏற்படக்கூடிய தொல்லையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், நாய்க்கடி பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்தவும் மாநகராட்சி நகா்நல அலுவலகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை சமூகப்பணி கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவியா் அவா்களது ஆய்வுக் கல்வி மற்றும் விருப்பத்தின் பேரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நாய்க்கடி பாதிப்பு, அவற்றுக்கான சிகிச்சை, நாய்க் கடியிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். இதுதொடா்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தனா்.