நாகை மாவட்டம், புத்தூர் அண்ணா சிலை அருகே பரப்புரை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதியளித்தது.
அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கட்சித் தலைவர்களும் பல்வேறு கட்டங்களாக சுற்றுப் பயணங்களிலும் பரப்புரைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தவெகவின் இரண்டாம்கட்டப் பரப்புரையை நாகப்பட்டினத்தில் நாளை (செப். 20) நடத்தத் திட்டமிட்டிருந்தனர். மேலும், தவெக தலைவர் பரப்புரை மேற்கொள்வதற்காக கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பேருந்து நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட 7 இடங்களில் அனுமதியளிக்க காவல்துறையில் அக்கட்சியினர் கோரியிருந்தனர்.
இதனையடுத்து, புத்தூர் ரவுண்டானா பகுதியில் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதியளித்தது. தொடர்ந்து, புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் உரையாற்றக் கோரிய அக்கட்சியினரின் கோரிக்கைக்கும் காவல்துறை அனுமதியளித்துனர்.
இருப்பினும், பகல் 12.30 மணியளவில் பேசத் தொடங்கி, அரை மணிநேரத்திலேயே விஜய் முடிக்க வேண்டும் என்றுகூறிய காவல்துறை, பரப்புரையின்போது பொதுச்சொத்துக்கு தொண்டர்களால் எவ்வித சேதமும் ஏற்படக் கூடாது என்றும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் நிபந்தனை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ’ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி விஜய் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.