தான் விஜய்யை எதிர்க்கவில்லை, கேள்வித்ன் கேட்கிறேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெரம்பலூரில் அவர் அளித்த பேட்டியில், விஜய்யை எதிர்க்கவில்லை. நான் கேள்விதான் கேட்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. முதல் மாநாட்டில் விஜய் எங்களை பேசியதற்கு அடுத்த நாளே கேள்வி கேட்டேன். திமுகவை எதிர்த்தால் ஆர்எஸ்எஸ் கைக்கூலி, பாஜக பணம் கொடுத்துவிட்டதாக சொல்வார்கள்.
பாஜகவை எதிர்த்தால் கிறித்தவ கைக்கூலி என்பார்கள். அதை விட்டுவிட்டு திமுகவிடம் பணம் வாங்கிவிட்டார் என பேசக் கூடாது. நீங்கள் பாஜக மற்றும் திமுகவை எதிர்கிறீர்கள் அதனால் காங்கிரஸ் மற்றும் அதிமுகவிடம் பெட்டி வாங்கிவிட்டீர்களா. தமிழ்நாடு தேர்வு ஆணையத்தில் நடைபெறும் குளறுபடிகளை படித்துப் பார்த்தால் உங்களுக்குத் தெரியவரும், அவ்வளவு சிக்கல் இருக்கிறது.
குறைந்தது 75 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். 55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள், அதிக 29 லட்சம் பேர் பெண்கள், 284 மாற்று பாலினித்தோர். 3,937 வேலைகளுக்கு 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகிறார்கள். இந்த வேலையும் முறையாக தகுதி உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை. திமுகவிற்கும் தவெகவிற்கும் எந்த அடிப்படையில் போட்டி என்பதை சொல்ல வேண்டும்.
60 ஆண்டுகளாக கோட்பாடு கொண்ட ஒரு கட்சியை சினிமா கவர்ச்சி மூலம் தகர்க்க முடியாது. மற்றொரு வலுவான கொள்கை கோட்பாடு கொண்ட கட்சியால் தான் முடியும். அதனால் தான் தமிழ்த் தேசியம் திராவிடத்தை வெல்லும் என்கிறோம், அதற்கான மாற்றத்தை முன்வைத்து அரசியல் செய்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.