கரூரில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தலைமைக் காவலரை, போலீஸார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரெளடியை தேடி வருகின்றனர்.
கரூர் தொழிற்பேட்டை அடுத்த சனப்பிரட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம் பெண்ணும், கரூர் சின்னாண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞரும் கடந்த 19ஆம் தேதி நள்ளிரவில் சனப்பிரட்டி அருகே உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தின் பின்புறம் நள்ளிரவு 1.30 மணியளவில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் வெங்கமேட்டைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் பிரபாகரன்( 35) மற்றும் கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த பிரபல ரெளடியான கௌதமன்(35) இருவரும் இருசக்கர வாகனத்தில் தொழிற்பேட்டை பகுதியில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே தனியாக பேசிக் கொண்டிருந்த இந்த இளஞ்சோடிகளைப் பார்த்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிரபாகரனும் கௌதமனும் சேர்ந்து இளம் பெண்ணுடன் வந்த இளைஞரை அடித்து உதைத்து தாக்கி, அவரை விரட்டியடித்த பின், 24 வயது இளம் பெண்ணை தலைமைக் காவலர் பிரபாகரனும், ரெளடி கௌதமனும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
அப்போது இருவரிடமும் இருந்து தப்பித்த இந்த இளம் பெண் அரைகுறை ஆடையுடன் சாலையில் ஓடி வந்தபோது, அங்கு மறைந்திருந்த இளம் பெண்ணை அழைத்து வந்திருந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று இளம்பெண்ணை அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த இளம் பெண் கரூர் பசுபதிபாளையம் போலீஸில் சனிக்கிழமை இரவு புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமைக் காவலர் பிரபாகரனை கைது செய்து, கரூர் ஜூடீசியல் மாஜிஸ்ட்ரேட்டு எண் -1-ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவான ரெளடி கௌதமனை தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: திமுக - தவெக போட்டியை ஏற்க முடியாது: நயினார் நாகேந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.