தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 7 மணி வரை ) சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

Rain chance for 18 districts of tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவை பழிதீர்க்குமா பாகிஸ்தான்? முதலில் பேட்டிங்!

பட்டுப் பூவே... மிர்னாலினி ரவி!

தாதா சாகேப் பால்கே விருது: மலையாள சினிமாவுக்கு கிட்டிய கௌரவம் - மோகன்லால் நெகிழ்ச்சி!

காதல் மான்... ரித்திகா நாயக்!

கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது; விஜய்க்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும்: கமல்ஹாசன்

SCROLL FOR NEXT