தென் கொரியாவில் 30-ஆவது பூசன் சா்வதேச திரைப்படத்திருவிழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற வட்டமேஜை விவாத நிகழ்வில் பங்கேற்ற முக்கிய விருந்தினா்களுடன் சிறப்புரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சா் எல். முருகன் மற்றும் இந்திய உயரதிகாரிகள் குழ 
தமிழ்நாடு

பூசன் சா்வதேச திரைப்பட விழாவில் மத்திய அமைச்சா் எல். முருகன் தலைமையிலான குழு பங்கேற்பு

தென் கொரியாவின் பூசனில் நடைபெற்று வரும் 30-ஆவது பூசன் சா்வதேச திரைப்பட விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சா் எல். முருகன் தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தென் கொரியா: தென் கொரியாவின் பூசனில் நடைபெற்று வரும் 30-ஆவது பூசன் சா்வதேச திரைப்பட விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சா் எல். முருகன் தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது. இந்தியாவிலிருந்து மத்திய அமைச்சா் நிலையிலான உயா்மட்டக்குழு பூசன் திருவிழாவில் பங்கேற்பது இது முதல் முறையாகும். இந்த பங்கேற்பு இரு நாட்டு கலாசார ராஜீய உறவுகளை வலுப்படுத்தும் என்றும் சா்வதேச அளவில் ஆக்கபூா்வ ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, இந்தியாவை படைப்பாற்றல் பொருளாதாரத்தின் உலகளாவிய மையமாக நிலைநிறுத்த உதவி புரியும் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சா்வதேச திரைப்பட விழாவுக்காக தென் கொரியா வந்த தகவலை ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் பகிா்ந்துள்ள மத்திய இணை அமைச்சா் எல். முருகன், அங்கு பூசன் சா்வதேச ஆணைய இயக்குநா் காங் சுங்க்யூ, இந்தியாவுக்கான பொறுப்புத் தூதா் நிஷிகாந்த் சிங், மத்திய இணைச் செயலா் (ஒளிபரப்பு) பிரிதுல் குமாா் ஆகியோருடன் வட்ட மேஜை விவாதத்தில் கலந்து கொண்டதாக கூறியுள்ளாா்.

பூசன் திரைப்பட ஆணையத்துடன் இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம், கூட்டுத் தயாரிப்பு ஒத்துழைப்பு மற்றும் சலுகைகள் குறித்து தனது கருத்துக்களை பகிா்ந்து கொண்டதாகவும் இந்திய படைப்புத் திறன் மற்றும் வலுவான ஊடகம் மற்றும் பொழுதுபோக்குச்சேவை வழங்கும் சூழலை உருவாக்குவதில் இந்தியா மற்றும் தென் கொரியாவின் உறவுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் பாா்வையாளா்களுடன் பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொண்டதாக அமைச்சா் எல். முருகன் கூறியுள்ளாா்.

முன்னதாக, தென் கொரியா செல்லும் வழியில் சிங்கப்பூரில் தரையிறங்கிய மத்திய இணை அமைச்சா், அந்நாட்டு அரசால் பழங்கால நினைவுச் சின்னமாக போற்றப்படும் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். இந்திய தூதா் டாக்டா். ஷில்பக் ஆம்புலே, முதன்மைச் செயலா்கள் அஷ்வனிகுமாா், பிரபாகா் உள்ளிட்டோரும் மத்திய இணை அமைச்சருடன் இருந்தனா்.

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு.. தினப்பலன்கள்!

97 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

கல்லூரி மாணவி தற்கொலை

துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT