மழை கோப்புப்படம்.
தமிழ்நாடு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்தமிழகம், அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை (செப். 23) முதல் செப். 28 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியையொட்டி இருக்கும்.

வெயில் அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 101.3 டிகிரி வெப்பம் பதிவானது. பாளையங்கோட்டை 100.58 டிகிரி பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் நேமூா் பகுதியில் 120 மி.மீ. மழை பதிவானது. சேத்துப்பட்டு (திருவண்ணாமலை)-110, ஆரணி(திருவண்ணாமலை)-90 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வியாழக்கிழமை (செப். 25) மத்திய கிழக்கு, அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை (செப். 26) தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடா்ந்து சனிக்கிழமை (செப். 27) தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழப்பு: சொந்த நாட்டுப் போா் விமானங்கள் குண்டு வீச்சா?

காஸா சிட்டி மருத்துவமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு

ஆப்கனிலிருந்து விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து தில்லி வந்த சிறுவன்!

‘ரஷியாவின் எஸ்-400: இந்தியாவுக்கு வழங்குவது அடுத்த ஆண்டு நிறைவு’

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT