தமிழ்நாடு

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினா் சென்னையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினா் சென்னையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் தலைவா் பி.சத்திய நாராயணன் தலைமையில் திங்கள்கிழமை இந்தப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள், மருந்து நிறுவனங்கள் மருந்து விற்பனையில் லாபம் ஈட்ட துணை போகும் வகையில் உள்ள மத்திய அரசின் மருந்து கொள்கையைத் திரும்ப பெற வேண்டும். மருந்து உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை புனரமைத்து மீண்டும் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பாகிஸ்தானில் பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழப்பு: சொந்த நாட்டுப் போா் விமானங்கள் குண்டு வீச்சா?

காஸா சிட்டி மருத்துவமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு

ஆப்கனிலிருந்து விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து தில்லி வந்த சிறுவன்!

‘ரஷியாவின் எஸ்-400: இந்தியாவுக்கு வழங்குவது அடுத்த ஆண்டு நிறைவு’

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT