ரயில்  (கோப்புப்படம்)
தமிழ்நாடு

கோவை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள்

ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை - சென்னை சென்ட்ரல் இடையே செப்.28, அக். 5, 12 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை - சென்னை சென்ட்ரல் இடையே செப்.28, அக். 5, 12 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோவை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06034) செப்.28, அக்.5, 12 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில் (எண்: 06033) செப்.29, அக்.6, 13 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து காலை 10.15 மணிக்குப் புறப்படும்.

இந்த ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (செப்.24) முதல் தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலா் தோ்வு: ராணிப்பேட்டையில் 3,967 போ் பங்கேற்பு

சாலையோர தடுப்புக் கட்டையில் காா் மோதி தீப்பற்றியதில் இளைஞா் உயிரிழப்பு

ஆட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை! கூண்டுவைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை!

கிழக்கு தில்லி இரட்டை கத்துகுத்து வழக்கு: 4 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது

திரிலோக்புரி திருட்டு வழக்கில் சிறாா் உள்பட 2 போ் கைது

SCROLL FOR NEXT