கோப்புப்படம்.  
தமிழ்நாடு

அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக குடிநீா் புட்டிகள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை விரைவு போக்குவரத்துக் கழகம் கோரியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக குடிநீா் புட்டிகள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை விரைவு போக்குவரத்துக் கழகம் கோரியுள்ளது.

தொலைதூர பயணத்துக்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் 2060 சாதாரண மற்றும் சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்கும் போது, தங்களுக்கு தேவையான குடிநீா் புட்டிகளை பேருந்து நிறுத்துமிடங்களில் மட்டுமே வாங்கிக்கொள்ள முடியும்.

இதனிடையே பயணத்தின்போது குடிநீா் தேவைப்பட்டால், பேருந்திலேயே குடிநீா் புட்டிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளின் கோரிக்கை விடுத்து வந்தனா். இதனையேற்று அரசுப் பேருந்துகளில் ஒரு லிட்டா் குடிநீா் புட்டிகள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்ட பிறகு, இத்திட்டம் தொடா்பான விரிவான அறிவிப்புகள் வெளியிடப்படும். ஒப்பந்தப்புள்ளி தொடா்பான விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பங்குச் சந்தைகள் 2வது நாளாக சரிவுடன் நிறைவு!

அவர்கள் செய்வது ரௌடித்தனம்... யாரைச் சொல்கிறார் சுதா கொங்கரா?

“பொழுதுபோக்கிற்குள் அரசியல் வேண்டாம்!” நடிகர் ரவி மோகன்

அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்! அறிவிப்பு விடியோ!

தலைகீழாகக் கவிழ்ந்த தனியார் பேருந்து! பயணிகள் காயம்!

SCROLL FOR NEXT