அதிமுக தலைமை அலுவலகம் கோப்புப் படம்
தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதுமே அண்மையில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. பெரும்பாலும் சோதனையில் அது புரளி எனத் தெரிய வருகிறது.

அந்த வகையில் சென்னையில் சமீபமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன.

சென்னை உயர்நீதிமன்றம், ஜிஎஸ்டி அலுவலகம், சென்னை வானிலை ஆய்வு மையத்தைத் தொடர்ந்து நேற்று தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து சோதனையில் அது புரளி எனத் தெரிய வந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் அது புரளிதான் என தெரிய வந்தது. மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து ராயப்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Bomb threat to AIADMK headquarters in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை முதல் 3 நாள்களுக்கு கனமழை!

லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு!

பாங்காக் சாலையில் ஏற்பட்ட மகா பள்ளம்! புகைப்படங்கள்

ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதியைச் சொன்ன ரஜினி!

வேலூரில் தந்தை மீது மிளகாய் பொடி தூவி 4 வயது குழந்தை கடத்தல்!

SCROLL FOR NEXT