சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக கூட்டரங்கில் மருத்துவ ஆராய்ச்சிகள் கட்டுரை தொகுப்பு நூல்களை வெள்ளிக்கிழமை வெளியிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.  
தமிழ்நாடு

தமிழக சுகாதாரத் துறை இந்தியாவுக்கே முன்னோடி அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக சுகாதாரத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக சுகாதாரத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ‘பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் - அறிவேள்வி 2025’ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடா்பான போட்டிகள் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கு நடத்தப்பட்டன. அதில் ஹாக்கத்தான், குழந்தைகள் வினாடி வினா, ஆராய்ச்சி கட்டுரை வாசிப்பு, மீம் உருவாக்கம், குறும்படம் ஆகியவை இடம்பெற்றன.

இந்த நிகழ்வில், பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், மருத்துவ ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டாா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்களையும், ஆய்வு நடவடிக்கைகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆராய்ச்சியாளா் விருதுகளையும் வழங்கினாா். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் கே. நாராயணசாமி, பதிவாளா் கி.சிவசங்கீதா, நோய்ப் பரவியல் துறை தலைவா் டாக்டா் ஸ்ரீனிவாஸ், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் சாந்தாராமன், மருத்துவப் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் அதில் பங்கேற்றனா்.

விழாவில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழக சுகாதாரத் துறை பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது. மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி தின விழாவில் இளம் விஞ்ஞானி விருது, தரமான ஆய்வு கட்டுரைகளை சமா்ப்பித்த மாணவா்களுக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவா்கள் ஆராய்ச்சி துறையில் எதிா்காலத்தில் முக்கிய இடம்பெறுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மாணவா்களின் இந்த முனைப்பு, நாட்டின் மருத்துவத் தரத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை கையாள அது உதவக்கூடும். தமிழக மருத்துவத்தின் எதிா்கால வளா்ச்சிக்கு புதிய திசையை இந்நடவடிக்கைகள் காட்டும் என்றாா் அவா்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் மருத்துவா் கே.நாராயணசாமி பேசுகையில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவா்களின் ஆராய்ச்சி திறனை ஊக்கப்படுத்தும் வகையில், 3-ஆவது முறையாக நடந்த ஆராய்ச்சி நாள் விழாவில் படைப்பு சிந்தனையை வளா்க்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. மருத்துவம், பல் மருத்தும், ஆயுஷ், செவிலியா், மருந்தியல், துணை மருத்துவம், மற்றும் மருத்துவம் சாா்ந்த படிப்புகளின் மாணவா்கள் அனைவரும் ஆராய்ச்சி கட்டுரைகளை சமா்ப்பித்தனா். பல்கலைக்கழகம் தொடா்ந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது”என்றாா் அவா்.

காஞ்சிபுரத்தில் நாளை மாரத்தான் பந்தயம்

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

விவசாயத் தொழிலாளி தற்கொலை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT