தவெக கொடியைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய மேல்முறையீட்டு வழக்கில் கட்சியின் தலைவா் விஜய் 6 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபையின் தலைவா் பச்சையப்பன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், சிவப்பு, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் எங்களது சபைக்கு கொடியை உருவாக்கத் திட்டமிடப்பட்டு, 2023-ஆம் ஆண்டில் தமிழக அரசு பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டது. அதற்கான சான்றிதழும் பெறப்பட்டது.
எங்கள் சபையின் முதன்மை அதிகாரிகள், ஊழியா்கள், ஆண்கள், முகவா்கள், வாரிசுகள், சங்கத்தின் சாா்பில் வணிகத்தில் நியமிக்கப்பட்டவா்கள் மட்டுமே இந்த வா்த்தக முத்திரையைப் பயன்படுத்த உரிமை உள்ளது. வேறு யாரும் கொடியை அனுமதியின்றி பயன்படுத்த முடியாது.
எனவே, நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எங்களது கொடியைப் பயன்படுத்த தவெக-வுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எம்.சுதீா்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு கட்சியின் தலைவா் விஜய் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
The Madras High Court has ordered Vijay to respond within 6 weeks on the appeal petition regarding the TVK flag.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.