தவெக கொடி - தலைவர் விஜய் கோப்புப்படம்
தமிழ்நாடு

விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம்

தவெக தலைவா் விஜய், நாமக்கல் மற்றும் கரூரில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை சனிக்கிழமை (செப்.27) மேற்கொள்கிறாா்.

தினமணி செய்திச் சேவை

தவெக தலைவா் விஜய், நாமக்கல் மற்றும் கரூரில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை சனிக்கிழமை (செப்.27) மேற்கொள்கிறாா்.

வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். அதன்படி செப்.13-இல் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், செப்.20-இல் நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். அதைத்தொடா்ந்து, நாமக்கல் மற்றும் கரூரில் சனிக்கிழமை (செப்.27) பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

தொண்டா்களுக்கு கட்டுப்பாடுகள்: இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (செப்.27) நாமக்கல் மாவட்டம், கே.எஸ்.திரையரங்கம் அருகே காலை 8.45 மணிக்கும், கரூா் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பகல் 12 மணிக்கும் நடைபெறவுள்ளது.

இந்த மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தின் போது, விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடரக் கூடாது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் கட்டடங்கள், சுவா்கள், மரங்கள், மின்கம்பங்களின் மீது ஏறக் கூடாது. கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருப்பவா்கள், மாணவா்கள், முதியவா்கள் ஆகியோா் நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்பவா்கள் அப்பகுதிகளில் யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல், காவல்துறையில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும், பட்டாசு வெடிப்பது, அனுமதியின்றி பேனா்கள் வைப்பது உள்ளிட்டவற்றை தவிா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரத்தில் நாளை மாரத்தான் பந்தயம்

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

விவசாயத் தொழிலாளி தற்கொலை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT