தவெக தலைவர் விஜய்... 
தமிழ்நாடு

சிபிஐ விசாரணை கோரும் தவெக!

கரூா் துயர சம்பவத்துக்கு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்...

தினமணி செய்திச் சேவை

கரூா் துயர சம்பவத்துக்கு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, தவெக சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை தவெக தரப்பு வழக்குரைஞா் அறிவழகன் தலைமையிலான அக்கட்சியினா் சென்று இந்த முறையீட்டை தாக்கல் செய்தனா். இந்த முறையீடு, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படவுள்ளதாக தவெக இணைப் பொதுச் செயலா் சி.டி.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

அந்த மனுவில், ‘சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும். திட்டமிட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டது. காவல் துறையினா் தொண்டா்கள் மீது அத்துமீறி தடியடி நடத்தினா். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கேவில் இருந்து விடைபெற்ற தளபதி ஜடேஜா..! ரசிகர்கள் சோகம்!

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனை வாங்கியது சிஎஸ்கே!

பிர்சா முண்டா பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை!

பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஜம்மு-காஷ்மீா்: பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்கள் வெடித்து 9 பேர் பலி,29 பேர் காயம்

SCROLL FOR NEXT