கரூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி, பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.
கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான மற்றும் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 51 பேர் சிகிச்சைப் பெற்று வரும் சூழலில், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே கரூர் சம்பவம் தொடா்பாக தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலா் மதியழகன் உள்ளிட்டோர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 25 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு பெண்ணின் அடையாளம் மட்டும் கண்டறியப்படவில்லை. அவரின் முகவரியைக் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.