கரூர் கூட்ட நெரிசல் பலி துரதிர்ஷ்டவசமானது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
மனுதாரர் தரப்பில் வாதத்தை முன்வைகத்து பேசிய வழக்கறிஞர், கரூர் தவெக கூட்ட நெரிசல் மற்றும் பெங்களூரு ஆர்சிபி கூட்ட நெரிசல் ஆகிய சம்பவங்களை குறிப்பிட்டார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி,
“கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமான சோகம். இதற்கு மேல் எதுவும் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், இதுபோன்ற நேரங்களில் மக்கள் வருவதைத் தடுப்பதும், தங்களுக்கான உரிமைகளை அவர்கள் பயன்படுத்துவதைத் தடுப்பதும் எப்படி என்பதுதான் சவால்.
கூட்ட மேலாண்மை மற்றும் பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கூட்ட மேலாண்மை, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பது மத்திய - மாநில அரசுகளின் பொறுப்பின் கீழ் வருகின்றது. இதற்கான கொள்கையை உருவாக்க துறைசார் வல்லுநர்களே பொருத்தமானவர்கள். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தையும் மனுதாரர் நாடியுள்ளார். இந்த மனுவை இந்த கட்டத்திலேயே முடித்து வைப்பது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம்.
மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இதுதொடர்பாக மனு அளிக்கலாம். அவர்கள் மனுவை பொருத்தமானதாகக் கருதினால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.