முகப்பு
தமிழ்நாடு

வாக்காளர் இறுதிப் பட்டியல்! கரூரில் 8.45 லட்சம் பேர்!

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 8 லட்சத்து 45 ஆயிரத்து 164 வாக்காளர்கள் உள்ளனர்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:27 PM
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுகிறார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மீ. தங்கவேல்.
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:23 PM

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 8 லட்சத்து 45 ஆயிரத்து 164 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இன்று வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மீ. தங்கவேல் இன்று (23.02.2026) வெளியிட்டார்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:23 PM

அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 4,06,027ஆண் வாக்காளர்களும், 4,39,054 பெண் வாக்காளர்களும், 83 பிற வாக்காளர்களும் என மொத்தம் 8,45,164 வாக்காளர்கள் உள்ளனர்.

Advertisement

கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி கரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 8,18,672 வாக்காளர்கள் இருந்தனர்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:23 PM

கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் மூலம் 35,743 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று 9,251 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

summary

There are a total of 8 lakh 45 thousand 164 voters in the 4 assembly constituencies in Karur district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.