முகப்பு
தமிழ்நாடு

வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 12 லட்சத்து 40 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர்.

Updated On : 23 பிப்ரவரி 2026, 12:53 pm IST
தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல்.
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 12 லட்சத்து 40 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இன்று வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரெ. சதீஸ் இன்று (23.02.2026) வெளியிட்டார்.

அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 6 லட்சத்து 24 ஆயிரத்து 647 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 15 ஆயிரத்து 311 பெண் வாக்காளர்களும், 150 பிற வாக்காளர்களும் என மொத்தம் 12 லட்சத்து 40 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர்.

Advertisement

Advertisement

கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 12 லட்சத்து 3 ஆயிரத்து 917 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் மூலம் 47 ஆயிரத்து 352 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று 11 ஆயிரத்து 161 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

summary

There are a total of 12,40,108 voters in the 5 assembly constituencies in Dharmapuri district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.