கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தில் யார் மீதும் பழி போடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு படுகாயங்களுடன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து கனிமொழி நலம் விசாரித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
''கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினேன். கூட்ட நெரிசலில் 40 பேர் இறந்தது மனதில் வடுவாக மாறியுள்ளது.
நான் அரசியல் பேச விரும்பவில்லை. யார் மீது பழிபோடுவது என்றெல்லாம் நாங்கள் இல்லை. அப்படி நினைத்திருந்தால் முதல்வர் மு.க. ஸ்டாலின் நள்ளிரவில் கரூருக்கு வந்திருக்க மாட்டார். எங்கள் பிரதிநிதிகள் இங்கே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்க மாட்டார்கள்.
இதில் சதி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, யார் கட்சி என்பதெல்லாம் இங்கு தேவையற்றது. தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பது முதல்வரின் பொறுப்பு. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | கரூர் பலி: ஒரு நபர் ஆணையத்தில் நம்பிக்கையில்லை - அண்ணாமலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.