கரூரில் சீமான் 
தமிழ்நாடு

கரூர் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை

கரூர் நெரிசலில் பலியானோரின் உடல்களைக் காணச் சென்ற நாம் தமிழர் கட்சி சீமானை, அங்கிருந்தோர் முற்றுகையிட்டு வாக்குவாதம்

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் நெரிசலில் சிக்கி பலியானோரின் உடல்களைக் காண முற்பட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, அப்பகுதியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் தவெக பிராசாரக் கூட்டத்தில் சிக்கி பலியானோரின் உடலைக் காண, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் சென்றார்.

பிணவரை முன்பாக சீமானை உள்ளே விடாமல் தடுத்த காட்சி

ஆனால், பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களைக் காண முற்பட்ட சீமானை, பலியானோரின் உறவினர்கள் முற்றுகையிட்டு, தங்களை பிணவறையினுள் செல்லக் கூடாது என்றும், உடல்களை விரைவில் ஒப்படைக்க மறுக்கிறார்கள் என்றும் சீமானிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?

Karur Stampede: Relatives of victims besieged Seeman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்... அமெரிக்காவுக்கு வழங்கியது வெனிசுவேலா!

நீ ஒரு கோழை.. துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்!

தினந்தோறும் 17 முறை நிவேதனம் அளிக்கப்படும் கிருஷ்ணர் கோயில்!

பணவரவு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பட்டுக்கோட்டை அருகே மகளின் சாவில் சந்தேகம் என தந்தை புகாா்

SCROLL FOR NEXT