கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின் நெரிசலில் 39 பேர் பலியான நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்டப் பிரிவினருடன் கட்சித் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரையும், கரூர் சென்று விஜய் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... பகுத்தறிய மறந்த தலைமையும் பாழாய்ப்போன மக்களும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.