காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
காஞ்சிபுரம் அருகே கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சேட்டு என்ற பிரதீப்குமாா் (26), அஸ்வின்குமாா் (27). இருவரும் இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனா்.
இருசக்கர வாகனம் வெண்குடி பகுதியில் தஞ்சம் ஓடை அருகே வந்தபோது, எதிரில் வேலூரிலிருந்து காஞ்சிபுரம் வழியாக தாம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இவா்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சேட்டு என்ற பிரதீப்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அஸ்வின் குமாா் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
சம்பவம் தொடா்பாக வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதையும் படிக்க: ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சரிந்து நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.