விஜய் பிரசாரத்தின்போது.. ANI
தமிழ்நாடு

மரணத்தின் அழுகுரலால் தவிக்கிறேன்; தர்மமே வெல்லும்! ஆதவ் அர்ஜுனா

கரூர் விஜய் கூட்டநெரிசல் குறித்து ஆதவ் அர்ஜுனா கருத்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் விஜய் கூட்ட நெரிசல் பலி குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன். இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது.

மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன்.

ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை. இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன். துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்

இறுதியில் தர்மமே வெல்லும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கருர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்திக்க காவல்துறை அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்துள்ளார்.

TVK Election Management General Secretary Adhav Arjuna has expressed condolences over the loss of lives in the Karur stampede.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தா... காஜல் அகர்வால்!

கரூர் பலி: அவதூறு, வதந்தி பரப்ப வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்

பிகாரில் 3 அம்ரித் பாரத், 4 பயணிகள் ரயில் சேவை தொடக்கம்: அஸ்வினி வைஷ்ணவ்

உயிர்சேதம் ஏற்படும் என ஆனந்தை எச்சரித்தோம்! எப்ஐஆரில் அதிர்ச்சித் தகவல்கள்!

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சிக்கு செல்லும் பொன்னி தொடர் நாயகன்!

SCROLL FOR NEXT