கோப்புப்படம்  EPS
தமிழ்நாடு

ஆயுத பூஜை: தென் மாவட்டங்கள் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

ஆயுத பூஜை போக்குவரத்து மாற்றம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆயுத பூஜை விடுமுறையைத் தொடர்ந்து தென் மாவட்டங்கள் செல்வோருக்கு செங்கல்பட்டு காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆயுத பூஜை (புதன்), காந்தி ஜெயந்தி (வியாழன்) விடுமுறையைத் தொடர்ந்து வார இறுதி நாள்களின் விடுமுறையும் வருவதால், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சாலை வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் முக்கிய போக்குவரத்து அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”செங்கல்பட்டு மாவட்டத்தில் என்.எச்-32 (ஜிஎஸ்டி சாலை) புக்கத்துறை மற்றும் படாளம் சாலை சந்திப்புகளில் மேம்பால கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், தசரா மற்றும் ஆயுத பூஜை பண்டிகைக்கு (30.09,2025 to 01.10.2025) தொடர்விடுமுறையில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை சந்திக்க நேரிடும்.

1. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் போது தாமதங்களை தவிர்க்க ஈசிஆர், ஜிடபள்யூடி சாலைகள் வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.

2. செங்கல்பட்டு மற்றும் சென்னையின் தென் பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், படாளம் மற்றும் புக்கத்துறை மேம்பால பணி நடைபெறும் பகுதிகளை தவிர்க்க, செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் - மேலவளம்பேட்டை வழியாக மீண்டும் ஜிஎஸ்டி சாலையை அடைந்து செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.

3. மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள்

- செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பைபாஸ் வழியாக திருமுக்கூடல் - நெல்வாய் கிராஸ் சாலை - உத்திரமேரூர் - வந்தவாசி - திண்டிவனம் வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.

- சென்னயிைலிருந்து மேற்கு செல்லும் மாவட்டங்களை நோக்கி வாகனங்கள் ஜிடபள்யூடி சாலை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.

- மேலும், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் 30.9.2025 பகல் 2 முதல் 1.10.2025 காலை 3 மணி வரை இயங்க அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ayudha Puja: Important announcement for those traveling to the southern districts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 26% அதிகரிப்பு!

கரூர் பலி: சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்!

பாகிஸ்தான் வீரர்கள் நிறைய பேசினார்கள், நான் பேட்டினால் பதிலளித்தேன்: திலக் வர்மா

பிரபாஸின் ராஜா சாப் டிரைலர்!

SCROLL FOR NEXT